Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 30, 2016

கொடூரம்’ - பிறந்த பச்சிளம் குழந்தை: கழுத்தை நெறித்து கொலை!



கொடூரம்’ - பிறந்த பச்சிளம் குழந்தை: கழுத்தை நெறித்து கொலை!
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு ரயில்நிலையம் அருகேயுள்ள குப்பை தொட்டியில் இறந்த நிலையில் ஆண்குழந்தையின் சடலம் ஒன்று இருந்துள்ளது.


இதை பார்த்த மக்கள் மீஞ்சூர் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தும், காவல்துறையினர், குப்பை தொட்டியில் ஆண்சிசு இருப்பதை பார்த்துவிட்டு அதை அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.

இதை அடுத்து, பொதுமக்கள், காவல்துறை உயரதிகாரிக்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து,  காவல்துறையினர், குழந்தையின்  உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை, தொப்புள் கொடியைக்கூட அறுக்காமல், குழந்தையின் கழுத்தில் பாவாடை நாடாவை சுற்றி இறுக்கி கொன்று குப்பையில் வீசியது தெரியவந்துள்ளது. அது, யாருடைய குழந்தை என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.