கோவையில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை பெரிய தடாகம், பாரதி நகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, இவர்களை, பிற சமூகத்தினர் ஜமாப் மேளத்தை இசைக்குமாறு வற்புறுத்தியாக கூறப்படுகிறது.
இதற்கு தாழ்த்தப்பட்ட இன மக்கள் மறுப்பு தெரிவித்ததால், அவர்களை மற்ற சமூகத்தினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.