September 13, 2016
விநாயகர் சிலை வைத்து வழிபட்டதற்காக தலித்துகளைத் தாக்கிய விவகாரம்!
கோவை பெரிய தடாகம் பகுதி தலித் மக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை பெரிய தடாகத்தில் கடந்த 7-ஆம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தலித் மக்களை ஜமாப் இசைக்க அப்பகுதியைச் சேர்ந்த மற்ற சமூகத்தினர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு தாங்கள் மறுத்ததால் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் 17 பேர் மீது கோவை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் தங்களை அச்சுறுத்தி வருவதால் அவர்களைக் கைது செய்ய வேண்டுமென தலித் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
விநாயகர் சிலை வைத்து வழிபட்டதற்காக தலித்துகளைத் தாக்கிய விவகாரம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.