September 23, 2016
முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதலிடம்
இந்திய பணக்காரர்களின் வரிசையில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் குறித்து ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் பட்டியலில் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். அதன்படி, ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 135 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சொத்துக்களுடன் ரிலையன்ஸ் நிறுவன இயக்குநர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்ததாக மருந்துப் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான சன் பார்மசிடிகல்ஸ் நிறுவன உரிமையாளர் திலிப் ஷாங்வி ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 263 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை ஹிந்துஜா குழுமம் பிடித்துள்ளது. இக்குழுமத்தின் சொத்து மதிப்பு 1 லட்சத்து ஆயிரத்து 870 கோடி ரூபாய்.
நான்காவது இடத்தை விப்ரோ நிறுவன இயக்குநர் ஆசிம் பிரேம்ஜி பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 530 கோடி ரூபாய். 5-வது இடத்தை ஷாபூர்ஜி பல்லன்ஜி குழும இயக்குநர் பல்லன்ஜி மிஸ்த்ரி பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 93 ஆயிரத்து 157 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்சிலர் மிட்டல் நிறுவன இயக்குநர் லட்சுமி மிட்டல் 6வது இடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தை கோத்ரெஜ் நிறுவன குடும்பம் பிடித்துள்ளது. இந்தியாவின் 8வது பணக்காரராக ஹெச்.சி.எல். நிறுவன இயக்குநர் ஷிவ் நாடார் உருவெடுத்துள்ளார். 9-வது இடத்தை ஆதித்ய பிர்லா குழும நிறுவன இயக்குநர் குமார் மங்கலம் பிர்லாவும், 10 இடத்தை பூனவல்லா குழுமத்தின் இயக்குநர் சைரஸ் பூனவால்லாவும் பிடித்துள்ளனர்.
இந்தியாவின் பெரும் பணக்காரர்கள்:
இந்திய பணக்காரர்கள் குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை அறிக்கை, ரிலையன்ஸ் நிறுவன இயக்குநர் முகேஷ் அம்பானி முதலிடம், சன் பார்மசிடிகல்ஸ் நிறுவன உரிமையாளர் திலிப் ஷாங்வி இரண்டாமிடம், ஹிந்துஜா குடும்பம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது, 4-வது இடத்தை விப்ரோ நிறுவன இயக்குநர் ஆசிம் பிரேம்ஜி பெற்றுள்ளார், 5-வது இடத்தை பிடித்துள்ளார் ஷாபூர்ஜி பல்லன்ஜி குழும இயக்குநர் பல்லன்ஜி மிஸ்த்ரி, 6-வது இடம் பிடித்துள்ளார் ஆர்சிலர் மிட்டல் நிறுவன இயக்குநர் லட்சுமி மிட்டல்.
கோத்ரெஜ் நிறுவன குடும்பம் 7-வது இடம் பிடித்துள்ளது, 8-வது பணக்காரர் ஹெச்.சி.எல். நிறுவன இயக்குநர் ஷிவ் நாடார், 9-வது இடம் பிடித்தார் ஆதித்ய பிர்லா குழும நிறுவன இயக்குநர் குமார் மங்கலம் பிர்லா, 10 இடம் பிடித்தார் பூனவல்லா குழுமத்தின் இயக்குநர் சைரஸ் பூனவால்லா
முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதலிடம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.