Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 28, 2016

துப்பாக்கி முனையில் பெண் பாலியல் பலாத்காரம்



உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி என்ற பகுதியில் வைத்து இளம்பெண் ஒருவரை, மர்ம கும்மபல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பலாத்காரம் செய்தது. அப்போது அதை தடுக்க வந்த பெண்ணின் சகோதரர் மீது, அந்த கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர்மீது குண்டு பாய்ந்தது.

அந்த கும்பலில் ஆறுபேர் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் தெரிவித்துள்ளார். துப்பாக்கி முனையில், இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.