Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

பெண் குழந்தை கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!



தூத்துக்குடி அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண் குழந்தை, கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கயத்தாறு அருகே இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த பால்பாண்டி- ஆனந்தி தம்பதியரின் 5 வயது பெண் குழந்தை காமினி, திடீரென்று கடந்த 4 நாட்களுக்கு முன்பாக காணாமல் போனது. பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் உறவினர்கள் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குழந்தையின் சடலம் கிடந்தது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்புப்படையினர் குழந்தையின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை உயிரிழந்தது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.