Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 27, 2016

வாட்ஸ் அப்பில் வந்த மோடி ஜோக் (டோன்ட் மிஸ் இட் மக்களே ...) சிரித்து வயிற்றுவலி வந்தால் நிர்வாகம் பொருப்பல்ல... !


இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த நரேந்திர மோடி "உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்றார்.

"சரி" என்ற ராணி, "அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

மோடி குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்றார்.

ராணி, "மிக எளிது; நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே, இண்டர்காம் பொத்தானை அழுத்தி, "டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.

டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் அம்மா" என்றார்.

ராணி சிரித்துக் கொண்டே கேட்டார், "டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?"

ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார்.

"நன்றி டேவிட் !" என்று கூறி ராணி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் மோடி பக்கம் திரும்பி "பார்த்தீர்களா?" என்றார்.

மோடி தன்னுடைய சுற்றுப் பயணத்தில், தெரியாமல் மீண்டும் இந்தியா வந்தவுடன் அமித் ஷாவிடம் கேட்டார்,



"அமித், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?"

"உறுதியா தெரியல; நாளைக்கு சொல்றேன்" என்ற அமித் ஷா அவரது ஆலோசகர்களான

கைப்பிள்ளை, சினேக்பாபு, வண்டு முருகன், வெடிமுத்து , நாய் சேகர், தீப்பொறி திருமுகம், சொங்கி மங்கி ஆகியோர் ஒவ்வொருவரிடமும் கேட்டார். யாருக்கும் பதில் தெரியவில்லை.

அதில் ஒருவர் 'காங்கிரசின் ஊழலை மட்டும் ஒழிப்போம்' என்று அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டவர். பழைய பழக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் ஓடி, "நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டு்ம். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார்.

கேஜ்ரிவால், "அது நான்தான்!" என்றார்.

விஷயத்தை கேள்விப்பட்ட அமித் ஷா மோடியிடம் ஓடி, "எனக்கு விடை தெரியும்" என்றார்.

"சொல்லு".

"அரவிந்த் கேஜ்ரிவால்தான் அது".

மோடி அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னார்,

"முட்டாள்! அது டேவிட் கேமரூன் டா!"

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.