Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 8, 2016

ஆறு மாதத்திற்கு உடலுறவு கூடாது. ஜிகா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு எச்சரிக்கை



உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வரும் ஜிகா வைரஸ் இந்தியாவிலும் ஆங்காங்கே காணப்படுகிறது. ஜிகா வைரஸால் பாதிக்கப்படவர்கள் 8 வாரத்துக்கு ஆணுறை பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே கூறி இருந்த நிலையில் தற்போது அவர்கள் 6 மாதத்துக்கு அவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபட கூடாது என்று கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இத்தாலி நாட்டை சேர்ந்த ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரை சோதனை செய்தபோது அவருடைய உயிரணுவில் 6 மாதத்துக்கு பிறகும் ஜிகா வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, உலக சுகாதார நிறுவனம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிலருக்கு ஜிகா வைரஸ் தாக்கினால் அது வெளியே தெரிய வரும். சிலருக்கு அறிகுறியே தெரியாது. எனவே, நோய் பாதிப்பு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் நிச்சயமாக 6 மாதத்துக்கு உடல் உறவை தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறி இருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.