September 19, 2016
மனைவி நடத்தையில் சந்தேகம் தலையை வெட்டி கோவில் முன்பு வைத்த கணவர்
நெல்லையை அடுத்த வெள்ளாளன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 47). இவர் பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா (வயது 45). இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், தேவி, ஆர்த்திகா என்ற மகள்களும் உள்ளனர்.
முத்துராஜூக்கு மதுகுடிக் கும் பழக்கம் இருந்தது. இத னால் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து உள்ளார். மனைவி ஜமுனாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. நேற்று இரவு கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இரு வரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலையில் முத்து ராஜ் எழுந்து மது குடித்தார். அப்போது பிளஸ்&2 மாணவியான அவரது மகள் ஆர்த்திகா வீட்டில் படித்துக் கொண்டிருந்தார்.மனைவி ஜமுனா சமையல் வேலையை கவனித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் முத்து ராஜூக்கு மனைவி மீது திடீரென ஆத்திரம் ஏற்பட்டது. அவர் மகள் ஆர்த்திகாவை சிறிது நேரம் வீட்டில் இருந்து வெளியில் செல்லுமாறு கூறினார்.
அந்த நேரத்தில் முத்துராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி ஜமுனாவை சரமாரியாக வெட்டினார். அவரது கழுத்து பகுதியில் பலத்த வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.அதன் பிறகும் ஆத்திரம் தீராத முத்துராஜ் மனைவி ஜமுனாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்து தெருவில் நடந்து சென்றார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறியடித்தபடி ஓடினர். முத்துராஜ் எந்த பதட்டமும் இல்லாமல் மனைவி தலையை ஊருக்கு வெளியே உள்ள கோவில் முன்பு வைத்தார்.
பின்னர் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மனைவியை வெட்டிக்கொன்று விட்ட தாக கூறி சரண் அடைந்தார். ஜமுனா கொலை செய்யப் பட்டதை அறிந்த அவரது மகன், மகள்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத் திற்கு வந்தனர். ரத்தவெள் ளத்தில் தலையின்றி கிடந்த ஜமுனாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மனைவி நடத்தையில் சந்தேகம் தலையை வெட்டி கோவில் முன்பு வைத்த கணவர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.