September 5, 2016
இரவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் என கேட்ட நிருபரின் கன்னத்தில் அறைந்த சன்னி லியோன்
கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார்.பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
அமெரிக்காவில் செக்ஸ் நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவர், இப்போது பாலிவுட்டில் நம்பர் ஒன் ஹீரோயின். இந்திய அளவில் மோடிக்குப் பிறகு கூகுள் தேடுதலில் அதிகமாக தேடபட்டும் சன்னி லியோனை, இப்போது ஆபாச நடிகை என யாராவது சொன்னால் அவருக்கு கோபம் வருகிறதாம்.
நான் பாலிவுட்டில் நடிப்பதற்கு முன்னர், சில ஆபாச படங்களில் நடித்தது உண்மை தான். ஆனால் இந்தியாவில் தற்போது வாழ்ந்து வரும் சன்னி லியோன் வேறு. இதனால் நேரலை பேட்டிகளில் பழைய கதைகளை கேட்டு நச்சரிக்காதீர்கள். இதுபோன்ற கேள்விகளை குறைத்துக்கொள்ளுங்கள் என வும் கேட்டு கொண்டார் இருந்தாலும் இது போன்ற சர்ச்சைகள அடிக்கடி வெடித்து விடுவது உண்டு. சில நாட்களுக்கு முன் ஆங்கிலத் தொலைக்காட்சி சேனலுக்குப் பேட்டி கொடுத்திருந்தார் அப்போது கேள்வி கேட்ட பத்திரிகை நிருபர் ‘‘பணத்துக்காகத்தானே நீங்கள் இப்படி ஒரு செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்தீர்கள்?’’ என்ற கேள்விக்கு, ‘‘நீங்கள்கூட பணத்துக்காகத்தானே என்னைப் பேட்டி எடுக்கிறீர்கள்?’’ என்று மடக்கினார்.சன்னி லியோனின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் சன்னி லியோனிடம் பேட்டி எடுத்த பத்திரிகை நிருபர் மீது விமர்சனங்கள் குவிந்தன.
தற்போது மேலும் ஒரு சர்ச்சை வெடித்து உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் சன்னியுடன் ஒரு ஹோலி கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சன்னி லியோன் கலந்து கொண்டார்.அப்போது அப்போது தேசிய செய்தி சேனல் நிருபர் ஒருவர் உங்கள் இரவு நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் என கேட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த சன்னி லியோன் அந்த பத்திரிகையாளர் கன்னத்தில் பளார் என அறைந்தார். இந்த பேட்டி ஓட்டல் நடைபாதையில் நடந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
இது குறித்து சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர் கூறும் போது
சன்னி லியோன் பொருத்தமான பதிலைத்தான் கொடுத்து உள்ளார். இது குறித்து எந்த போலீஸ் புகாரும் அளிக்கவில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்கள் வருங்காலம் பாதிப்படைய கூடாது. இனிமேல், சன்னி குஜராத் வருவதற்கு முன்னால் ஒரு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
இரவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் என கேட்ட நிருபரின் கன்னத்தில் அறைந்த சன்னி லியோன்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.