Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 30, 2016

கள்ள உறவிற்கு தடையாக இருந்த மாமியாரின் தலையில் கல்லைபோட்டு கொன்ற மகள்!



கள்ள உறவிற்கு தடையாக இருந்த மாமியாரின் தலையில் கல்லைபோட்டு கொன்ற மகள்!

மதுரை அருகே மது போதையில் மாமியாரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மருமகனை பொலிசார் தேடி வருகின்றனர்.


 மதுரை அருகே உள்ள பொட்டப்பனையூர் ராணிமங்கம்மாள் நகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் (54). இவரது மனைவி கமர்நிஷா (50). இவர்களது மகள் மும்தாஜ் பேகத்துக்கும், மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்த ரபீக்ராஜாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் மும்தாஜ்பேகம் கரும்பாலை பகுதியில் கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரபீக்ராஜா வேலைக்கு சரிவர செல்லாமல் மதுபோதையில் மும்தாஜ்பேகத்தை கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் மும்தாஜ்பேகம் அவ்வப்போது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்து விடுவார். பின்னர் ரபீக்ராஜா உறவினர்களுடன் சென்று சமாதானம் பேசி அழைத்துச் செல்வார். சில மாதங்களில் மீண்டும் கொடுமைப்படுத்தத் தொடங்கி விடுவாராம்.

 இவரது கொடுமை அதிகமானதால் 9 மாதங்களுக்கு முன் மும்தாஜ்பேகம் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இடையில் ரபீக்ராஜா அழைத்தும் செல்ல வில்லையாம். இதனால் ஆத்திரத்தில் இருந்த ரபீக்ராஜா, மாமியார் வீட்டுக்கு வியாழக்கிழமை மதுபோதையில் சென்றுள்ளார். அங்கு தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது மாமியார் கமர்நிஷா, அவரை கண்டித்துள்ளார்.

 இதையடுத்து ஏற்பட்டத் தகராறில் ரபீக்ராஜா, வீட்டு வாசலில் கிடந்த கல்லைத்தூக்கி கமர்நிஷா தலையில் போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கமர்நிஷா அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ரபீக்ராஜா மீது கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.