Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 23, 2016

தமிழக அரசு கவனத்துக்கு கோவையை மீண்டும் குறிவைக்கும் இந்து முன்னணி?



கோவை இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் செப்டம்பர் 22 இரவில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டார். காயமடைந்த அவரை பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தை கேள்விப்பட்ட இந்து முன்னணியின் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் தங்கள் அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டனர். இன்று அதிகாலையில் கோவையில் உள்ள கெம்பட்டி காலனி பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பூ மார்கெட் பள்ளிவாசல் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காலையில் பேருந்துகள் மீதும் கல்வீச்சு நடத்தப்பட்டதால் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தனியார் பேருந்துகளும் இவர்களின் கல்வீச்சில் இருந்து தப்பவில்லை. முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளும் தாக்குதலுக்கு ஆளாகின. நிலைமை மோசமடைந்ததால் காவல்துறையினரே கடைகளை அடைக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. சில இடங்களில் கல்வீச்சில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
இந்து முன்னணி கொடியுடன் கும்பலாக சென்றவர்கள் கடைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களும் இந்து முன்னணியனரால் தாக்கப்பட்டன. பல இடங்களில் காவல்துறையினர் சம்பவ இடங்களில் இருந்த போதும் அவர்கள் இந்து முன்னணி மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை காணொளிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. டவுண் ஹால் பகுதியில் நடைபெற்ற தாக்குதலின் போது முஸ்லிம்களின் வாகனமா என்பதை கண்டறிந்து இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது தெளிவாக தெரிகிறது.
கிறிஸ்தவர்களின் வணிக நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் கூட இவர்களின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
கரும்புக்கடை பகுதியில் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து கடைகளை அடைக்க வற்புறுத்திய இந்து முன்னணியினரை முஸ்லிம்கள் தடுத்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சசிகுமாரின் உடலை இந்து முன்னணியினர் அவரின் இல்லத்திற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். இன்று மாலை அவரின் உடல் தகனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மட்டுமின்றி திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் சங்பரிவார்கள் பிரச்சனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் ஓசூரில் விஷ்வ இந்து பரிஷத் பிரமுகர் சூரி அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். அப்போதும் சங் பரிவார்கள் பதற்றத்தை ஏற்படுத்தினர். ஆனால் முன்விரோதம் காரணமாகத்தான் சூரி படுகொலை செய்யப்பட்டார் என்பது பின்னர் தெளிவாகியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.