September 20, 2016
பேஸ்புக்கில் அறிமுகமான உத்தரகன்ட் பெண்ணை சென்னைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
பேஸ்புக்கில் அறிமுகமான உத்தரகன்ட் பெண்ணை சென்னைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவரை சிறையில் அடைத்தனர். பெண்ணை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். சென்னை அருகே குன்றத்தூர் பாபு நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் அங்குள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில், ஆன்லைனில் மணமகள் தேவை என்று விளம்பரம் செய்தார்.
இதை பார்த்த உத்தரகன்ட் மாநிலத்தை சேர்ந்த தமன்னா (34) என்பவர், சதீஷ்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார். இதன்பிறகு இருவரும் அடிக்கடி பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறிக்கொண்டனர். கடந்த வாரம் சதீஷ்குமார், பேஸ் புக்கில் பேசி, சென்னைக்கு வாருங்கள். திருமணம் செய்வது பற்றி பேசலாம்’ என்றார். இதையடுத்து, கடந்த 17ம் தேதி தமன்னா விமான மூலம் சென்னைக்கு வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சதீஷ்குமார், தமன்னாவை அழைத்துக்கொண்டு குன்றத்தூர் வந்தார்.
தனது வீட்டில் 2 நாள் தமன்னாவை தங்கவைத்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி குன்றத்தூர் போலீசில் தமன்னா புகார் செய்தார். அந்த புகாரில், ‘’பேஸ் புக்கில் அறிமுகமான சதீஷ்குமார் என்னை சென்னைக்கு வரவழைத்து அவரது வீட்டில் தங்கவைத்தார். திருமணம் செய்துகொள்ளலாம் என்று என்னிடம் தப்பாக நடக்க முயன்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சதீஷ்குமார் கூறுகையில், ‘’ தமன்னாவை நான்தான் அழைத்துவந்தேன்.
ஆனால் வீட்டுக்கு வந்ததும் மது அருந்த வேண்டும் என்றார். இதன்படி இருவரும் மது குடித்தோம். மற்றபடி அவரிடம் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை’ என்றார். இருப்பினும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். அவரை பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்படி, வேலூர் சிறையில் சதீஷ்குமாரை அடைத்தனர். தமன்னாவுக்கு விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து உத்தரகன்ட் மாநிலத்துக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.பேஸ் புக்கில் அறிமுகமான உத்தரகன்ட் பெண்ணை சென்னைக்கு வரவழைத்து தவறாக நடக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேஸ்புக்கில் அறிமுகமான உத்தரகன்ட் பெண்ணை சென்னைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
Reviewed by மறத்தமிழன்
on
September 20, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
September 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.