Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

கூலித் தொழிலாளி வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!



திருச்சி மாவட்டம் துறையூரில் கூலித்தொழிலாளி ஒருவரது வீட்டின் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ஆதனூரில் கூலி வேலை செய்து வருபவர் லியாகத் அலி.
நேற்றிரவு லியாகத், வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது.

உடனே வெளியே வந்த பார்த்த போது, வீட்டின் முன்பு குண்டு வெடித்திருந்தது. இதில் வீட்டின் ஓடுகள் மற்றும் அருகிலிருந்த ரேசன் கடை குடோன் சேதமடைந்தது.

இந்த சம்பவம் குறித்து, புலிவலம் காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

குண்டு வெடித்த இடத்தில் கந்தகத் துகள்கள் சிதறி கிடந்ததும், வீட்டின் முன்பு வெடித்தது கையெறி குண்டு என்பதும் ஆய்வில் தெரியவந்தது.

கையெறி குண்டு வீசியவர்கள் பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் வீட்டின் முன்பு கையெறி குண்டு வீசப்பட்டது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.