September 15, 2016
கர்நாடகாவிலிருந்து கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் திரும்பும் தமிழர்கள்!
காவிரி பிரச்சனையால், கர்நாடகாவில் நிலவும் அசாதாரண சூழல் மற்றும் தமிழர்களுக்கு எதிரான கன்னட அமைப்புகளின் போராட்டம் ஆகியவற்றால், கர்நாடகா வாழ் தமிழர்கள் கூட்டம், கூட்டமாக சொந்த ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திரந்து விடக்கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் பல இடங்களில் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
தமிழர்கள் பலரும் தாக்கப்பட்டனர். இதனால் அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கர்நாடகாவில் ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையிலும் சில இடங்களில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக பெங்களூரில் வாழும் தமிழர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக தங்களது உடைமைகளுடன் கர்நாடக பேருந்து மூலம் மாநில எல்லையான அத்திப்பள்ளி வந்து அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே தமிழக எல்லையை வந்தடைகின்றனர்.
கர்நாடகாவிலிருந்து கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் திரும்பும் தமிழர்கள்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.