Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 5, 2016

மதிகுழம்பிய கலவரக்காரர்கள் – கோழி உணவை மாட்டுக்கறி என நினைத்து அடி, உதை, ட்ரக் எரிப்பு



கோழிகளுக்கான உணவை மாட்டுக்கறி என நினைத்ததால் ட்ரக் ஓனருக்கு அடி, உதை. அவருடைய ட்ரக் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

உத்திர பிரதேசத்திலிருந்து கோழிகளுக்கான பதப்படுத்தப்படாத உணவைத் தன்னுடைய ட்ரக் வண்டியில் ஏற்றி, ராஜேஷ் ஜெயின் என்பவர் ஓட்டுனருடன் சென்றுகொண்டிருந்தார். வழியில் ட்ரக் ரிப்பேராகவே, தன் ஓட்டுநரை மெக்கானிக்கை அழைத்து வரச்சொன்னார். கோழிக்கான உணவு பச்சையாக இருந்ததால் அதிலிருந்து உண்டான வாடை, காத்துக்கொண்டிருந்த ட்ரக் அருகில் இருந்தவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. போபாலில் இருந்து உ.பி.க்கு மாட்டுக்கறியைத் தான் ட்ரக்கில் கடத்திச் செல்கிறார்களோ என தவறாக ஊகித்த கூட்டத்தினர், வண்டியில் உறங்கிக்கொண்டிருந்த ஜெயினை கீழே தள்ளி அடித்து அடித்து உதைத்துள்ளனர்.

எதையும் தீர விசாரிக்காத கூட்டத்தினர், கண்ணிமைக்கும் நேரத்தில் ட்ரக் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து கலவரக்காரர்களில் இருவரைக் கைது செய்தார். மற்ற 13 பேரைத் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.