September 5, 2016
இன்று ஆசிரியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து!
ஆசிரியர்கள் கண்டிப்பாக இருப்பதில் தப்பில்லை!
பிறந்தது முதல் இறக்கும் வரை ஒரு மனிதன் எதையாவது ஒன்றைக் கற்றுக் கொண்டுதான் இருக்கிறான். அது உயிர் வாழ்வதற்காக இருந்தாலும் சரி; வாழ்க்கைக் கல்விக்காக இருந்தாலும் சரி. சில விஷயங்களை நாம் தானே கற்றுக் கொள்கிறோம். சில விஷயங்களுக்கு அனுபவம் ஆசான இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் கல்விச் செல்வத்திற்கும் குழந்தைச் செல்வத்தை நல்வழிப்படுத்தவும் ஆசிரியர் என்பவர் மிகவும் முக்கியம்.
குழந்தையின் முதல் வார்த்தை அம்மாவாக இருந்தாலும் அக்குழந்தையின் முதல் எழுத்தான ‘ அ’- வை கற்றுக் கொடுப்பது ஆசிரியர்கள் தான். இந்தக் குழந்தைகள் தன்னுடைய வாழ்க்கை ஓட்டத்தின் முதல் பகுதியில் அதிக நேரத்தைச் செலவிடுவது இந்த ஆசிரியர்களுடன்தான். அதனால் தான் ஒரு குழந்தையை முறையாக செதுக்கும் பொறுப்பு இந்த ஆசிரியர்களிடம் உள்ளது. இந்த பொறுப்பை ஒவ்வொரு ஆசிரியர்களும் மிக கவனமாக கையாள வேண்டும் என்பதை உணர்ந்தே அவர்கள் செயல்படுகின்றனர். இது செவ்வனே நடக்கும் செயல்தான், சில பெற்றோர்களின் தலையீடு இல்லை என்றால்.
சவால் மிக்க இன்றைய உலகில் தன் பிள்ளை பீடு நடை போட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் பல பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அவர்கள் போடும் முதல் நிபந்தனை தன் பிள்ளையைக் கண்டிக்க கூடாது என்று. தன் பிள்ளை தவறு செய்யும் போது வீட்டில் பிள்ளைகளை கண்டிக்கும் நாம் ஏன் அதே தவறை பிள்ளைகள் பள்ளிகளில் செய்யும் போது இந்த கண்டிப்பு தேவையில்லை என்ற நிபந்தனையை முன் வைக்கிறோம்.
பிள்ளைகள் செய்யும் தவறைக் கண்டித்தால் மட்டுமே அது தவறு என்ற உண்மை பிள்ளைகளுக்கு புரியவைக்கமுடியும். ஒரு காரியத்தின் விளைவை புரிய வைக்காவிட்டால் அவர்கள் அந்த தவறினை தன்னைத் தானே அறியாமல் திரும்பத் திரும்பச் செய்வர். இந்த தவறுகள் அவர்களுக்கு பிற்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றால் சில சமயங்களில் ஆசிரியர்கள் கண்டிப்பாக இருத்தல் அவசியம். அதேசமயத்தில் இந்த கண்டிப்பு ஒர் வரையறைக்குள் இருப்பதும் அவசியம்.
கண்டிப்பாக இருக்கும் ஆசிரியர்கள் அன்பாக இருக்க மாட்டார்களா? ஒரு மாணவனின் மேல் கொண்டிருக்கும் அன்பாலும் அக்கறையினாலும்தான் இந்தக் கண்டிப்பு பிறக்கின்றது. அவன் எக்கேடு கெட்டுப் போகட்டும் என ஒரு ஆசிரியர் நினைத்தால் மாணவர்கள் செய்யும் செயலை அவர்கள் சட்டை செய்யவே மாட்டார்கள். அப்புறம் என்ன கண்டிப்பு?
தன்னுடைய 24 மணிநேரத்தில் பள்ளியில் மட்டும் ஒரு மாணவன் குறந்தது 7 மணிநேரம் செலவு செய்கிறான். இந்த குறிப்பிட்ட சமயத்தில் அவன் செய்யும் காரியங்கள் கண்டிப்பாக பெற்றோர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆசிரியர்கள் சொல்லாத வரை. இதனால்தான் ஆசிரியர்கள் என்பவர்கள் ஒரு மாணவனுக்கு தாயாக தந்தையாகவும் இருக்கின்றனர்.
பெற்றோர்களுக்கு குறந்தது 1 குழந்தை என்றால் ஆசிரியரகளுக்கு குறந்தது 30 குழந்தைகள். இந்த குழந்தைகளை நல்வழிப்படுத்தும் கடமையை அவர்கள் சரிவர செய்ய வேண்டாமா? சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகளுக்காக எல்லா ஆசிரியர்களையும் குறை சொல்வது தப்பு.
அதற்காக பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பிறகு ஆசிரியர்கள்தான் எல்லா பொறுப்புகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. ஆசிரியர்களின் கண்டிப்பும் பெற்றோர்களின் கண்காணிப்பும் மட்டுமே ஒரு மாணவனை பார் புகழும் மானுடனாக உருவாக்க முடியும்.
சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யும் மாணவர்களின் வாழ்க்கைப் பாதைகளுக்கு கம்பளமாக இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை - நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே
எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்
உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை - நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே
எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்
உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்
இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்திருந்தாலும்
நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை ...!
இன்று ஆசிரியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.