Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 15, 2016

மனைவி விற்பனைக்கு – கணவன் விட்ட ஏலம்



லண்டன் வேஃபீல்ட் பகுதியில் டெலிகாம் இன்ஜினியர் சைமன் ஓ கேன் என்பவர் தன்னுடைய மனைவி லியாண்ட்ரா என்பவரை ஈபே எனப்படும் இணையதள விற்பனை மையத்தில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. சைமனுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது அவரது மனைவி லியாண்ட்ரா அவரை விழுந்து விழுந்து கவனிக்காமல் வீட்டு வேலைகளிலேயே கவனமாக இருந்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த சைமன் ஈபே என்னும் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் தளத்தில் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு பயன்படுத்திய மனைவி விற்பனைக்கு என விளம்பரம் கொடுத்துள்ளார்.

மேலும், மனைவியின் தகுதிகள் என, நல்ல அழகு, சிறப்பாக சமையல் செய்வார். ஆனால் இறக்கமற்றவர், இளைஞர்கள் அவரை நன்றாக பயன்படுத்தலாம் என கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விளம்பரத்தை பதிவிட்ட இரண்டே நாளில் ஒருவர் அவரது மனைவியை 65880 பவுண்ட்டுக்கு ஏலத்தில் கேட்டிருந்தனர். இந்த ஏல விவரங்களை தெரிந்து கொண்ட லியாண்ட்ரா அந்த விளம்பரத்தில், தனது அழகான போட்டோவை சைமன் போடாமல் சுமாரான போட்டோவை போட்டதற்காக அவரை துரத்தியுள்ளார். அப்போது சைமன் லியாண்டாரவிடம் அவரது அரவணைப்பை தனது இயலாமையின் போது எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காததால் அப்படி செய்ததாகவும் கூறினார்.

கணவரின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட மனைவி அவரிடம் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு புது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.