Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 1, 2016

குஜராத்தில் குறிப்பிட்ட பண்டிகைக்காக தடைவிதிக்கப்படும் இறைச்சி



குஜராத்தில் குறிப்பிட்ட பண்டிகைக்காக தடைவிதிக்கப்படும் இறைச்சி

குஜராத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளின் கொல்வது, இறைச்சியை விற்பனை செய்வது மற்றும் உண்பது ஆகிவற்றுக்கு ஆகஸ்ட் 29  முதல் செப்டம்பர் 5 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெயின் இன மக்களின் 'Paryushan' உண்ணாநோன்பை முன்னிட்டு, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை ஜெயின் இன மக்களின் மத உணர்வுகளைப் மதிக்கும்பொருட்டு இந்த அசைவ உணவுகளுக்கான தடை கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து, மனு ஒன்றை ஜெய் தாக்கூர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஹெச்.வோரா, அரசு தனது தரப்பு நியாயத்தை மனுதாரருக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், மனுதாரர் தொடர்புடைய அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்துப் பேசிய மனுதாரரின் வழக்கறிஞர் ஜே தாக்கர், ‘இந்த மனுமீதான விசாரணை வியாழக்கிழமை அன்று அமர்வு நீதிமன்றத்துக்கு வருகிறது’ என்று கூறினார்.

அஹமதாபாத், சூரத் போன்ற நகரங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. இந்த நகரங்களைத் தவிர, ஏனைய இடங்களில் இறைச்சி விற்பனை மையங்களும் சேமிப்புக் கூடங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

சிறுபான்மை ஜெயின் இன மக்களின் உணர்வை மதிக்கும் வகையில், கறி விற்பனைக் கூடங்களை மூட 2008-இல் இயற்றப்பட்ட சட்டம் வழி வகுக்கிறது. குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல் இதுகுறித்துப் பேசும்போது, இந்த நடைமுறை ஏற்கனவே பின்பற்றப்பட்ட ஒன்றுதான் எனத் தெரிவித்துள்ளார்

மேலும் குறிப்பிட்டர்வகளின் பண்டிகைக்காக இறைச்சியை ஒட்டுமொத்தமாக தடை செய்வது இறைச்சி தொழில் நடத்துபவர்கள் பாதிப்படைவார்கள் என்றும்  மத சார்பின்மைக்கு எதிரானது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.