Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 21, 2016

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்


* வெற்றிலையுடன், மிளகை அரைத்து, பாக்களவு உட்கொண்டு, பின், வெந்நீர் அருந்தினால், எல்லா விஷங்களும் முறியும்.
* உடலில் அதிக வெப்பத்தையும், வலியையும் நீக்கும் குணம், வெற்றிலைக்கு உண்டு.
* வெற்றிலையுடன், சிறிது உப்பை மடித்து சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் குத்து வலி நீங்கும்.
* வெற்றிலை சாறும், தேனும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, தினமும் இருவேளை அருந்திவர, உடல் பலவீனமும், நரம்பு தளர்ச்சியும் நீங்கும்.
* வெற்றிலையுடன், சம அளவு ஓமம் சேர்த்து, இடித்து, பிழிந்து, அச்சாற்றை தேன் கலந்து பருகினால், வயிற்றுப் பொருமலுடன் கூடிய வயிற்றுப் போக்கு நிற்கும்.
*கடுமையான தலைவலி இருந்தால், வெற்றிலையை அரைத்து பத்துப் போட்டால், தலைவலி நீங்கும்.
* குழந்தை பெற்ற தாய்க்கு அதிகமாக பால் சுரக்க, வெற்றிலையை, சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி, மார்பில் வைத்து கட்ட, பால் சுரக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.