சென்னை: இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு சாதகத்தை ஏற்படுத்துகின்றனவோ, அதே அளவுக்கு பாதகத்தையும் ஏற்படுத்துகின்றன என்பதற்கு சிறந்த உதாரணம் ஆன் லைன் சூதாட்டம். முகநூல் தொடங்கி, செய்தி இணையதளங்கள் வரை எதை திறந்தாலும் அதில் வாசகர்களை கவரும் வகையில் பெரிய அளவில் தெரியும் விளம்பரங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களாகவே உள்ளன.
அதுமட்டுமின்றி, ஆன் லைன் சூதாட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள், அதற்காக எவ்வளவு தொகையை செலுத்தினாலும் சூதாட்ட நிறுவனத்தின் சார்பில் அதிகபட்சமாக ரூ.1,500 வரை போனஸ் வழங்கப்படும் என்றும், அதைக்கொண்டு அதிக நேரம் விளையாடலாம்; அதிக பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரத்தில் வலை விரிக்கப்படுகிறது. இதற்கு மயங்கி, ஆன் லைன் ரம்மி என்ற சூதாட்டத்தை விளையாடத் தொடங்குபவர்கள், தங்களின் பணத்தையும் இழந்து, சூதாட்டத்திற்கு அடிமையாகிறார்கள்.
கணினி வசதி இருப்போர் மட்டும் தான் இணைய தளங்களை பார்க்க முடியும் என்ற காலம் மாறிவிட்டது. ஸ்மார்ட் தொலைபேசிகளின் வருகையால், பாமரர்கூட செல்பேசியிலேயே இணையத்தை பயன்படுத்த முடியும் என்பதால் மிகவும் எளிதாக இந்த சூதாட்ட வலையில் விழுந்துவிடும் ஆபத்து உள்ளது.

இப்போதே ஏராளமான இளைஞர்கள் இந்த சூதாட்ட வலையில் விழுந்து தங்களின் மாத ஊதியத்தில் பெரும் பகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணப் பரிமாற்றம் இணையதளம் மூலமாகவே நடக்கிறது என்பதால், எவ்வளவு பணத்தை இழந்தோம் என்ற நினைவுகூட இல்லாமல், இளைஞர்கள் தொடர்ந்து விளையாடி அரும்பாடுபட்டு ஈட்டிய வருமானத்தை இழந்துவிட்டு தவிக்கின்றனர். ஆனாலும், சூதாட்டத்தின் பிடியிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை.
சென்னை தியாகராயர் நகரில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட விடுதிகள் நடைபெறுவது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ரம்மி ஆடுவதும் சூதாட்டம் தான் என்றும், இது தடை செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. ஆனால், அதை எதிர்த்து சூதாட்ட விடுதிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அதில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டி ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மனுத் தாக்கல் செய்தன.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆன்லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை என்று கூறி தள்ளுபடி செய்து விட்டது. அத்தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இல்லை என்று கூறி, பல நிறுவனங்கள் அதை நடத்தி வருகின்றன. உண்மையில், சூதாட்ட விடுதிகளில் விளையாடப்படுவதைப் போன்று தான் ஆன்லைனிலும் ரம்மி விளையாடப்படுகிறது.
ஆன்லைனில் ரம்மி விளையாடி தோற்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை பெருமளவில் இழக்கிறார்கள்; இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன. விதிமுறைகளே வகுக்கப்படாமல் ஆன்லைன் விளையாட்டுக்களை மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு அனுமதிக்கின்றன என்பது தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டம் உடனடியாக தடுக்கப்படா விட்டால், எதிர் காலத்தில் மிகமோசமான சமூக, பொருளாதார பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
அதனால், புதிய விதிகளை உருவாக்கியோ, ஏற்கனவே உள்ள விதிகளின்படியோ ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.