Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 12, 2016

கர்நாடகாவில் தமிழர்கள் மீது அதிகரிக்கும் தாக்குதல்!


தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்துள்ளது. பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்கள் மற்றும் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதால்  மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு உள்ளிட்ட செயல்களில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் வன்முறையால் இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழ் இளைஞர் ஒருவரை கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தமிழக இளைஞர் மீது தாக்குதல் நடத்திய கன்னட அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள், ஹோட்டல்கள், வங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பெங்களூருவில் கன்னட அமைப்பினர் தமிழக வாகனங்கள், ஹோட்டல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பெங்களூருரில் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல்கள் சுமார் 30 பகுதிகளில் இயங்குகின்றன. இதில் மைசூர் ரோடு- சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் மீது 50 பேருக்கும் மேற்பட்ட கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் கண்ணாடிகள் நொறுங்கியது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கலவரக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதேபோல இந்திராநகர் பகுதியில் பூர்வீகா செல்போன் ஷோரூம் மீதும் கன்னட அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.



இதனிடையே, பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. சில இடங்களில் மட்டுமே தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெங்களூருவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வால் பெங்களூரு நகரத்தில் அறிவிக்கப்படாத பந்த் போன்ற காட்சி நிலவுகிறது. பெங்களூரு புறநகர் பகுதியில் இரண்டு தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டன. பெங்களூரு நகருக்குள், தமிழக பதிவெண் தனியார் பஸ் கல்வீச்சுக்கு உள்ளாகியது.

பெங்களூரு, மைசூர், மாகடி, ராஜாஜி நகர், யெஷ்வந்த்பூர் உள்ளிட்டவற்றில் வன்முறை வெடித்துள்ளதால் தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, தமிழக இளைஞரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அதே போல் தமிழகத்தில் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி, கர்நாடக முதல்வருக்கு உறுதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.