ஃபுட் ட்ரக்... மெட்ரோ பாலிட்டன் சிட்டிகளில் இன்று வேகமாக வளர்ந்துவரும் காலாசாரம். அதாவது, இது ஒரு நகரும் உணவு ஊர்தி. ஒரு பெரிய வண்டியில் உணவுகளைச் சமைத்து, அந்த வண்டியிலேயே வைத்து விற்கப்படுவது. ஒவ்வொரு நாளும் மக்கள் கூடும் இடங்களாகப் பார்த்து இந்த மொபைல் ஹோட்டல் செயல்படும்.
பெங்களூருவில் இயங்கும் 'செவன்த் சின்' ஃபுட் ட்ரக்... முழுக்க முழுக்க பெண் ஊழியர்களை மட்டுமே கொண்டு இயக்கப்பட்டும் ஆசியாவின் முதல் ஃபுட் ட்ரக் என்ற பெருமைக்குச் சொந்தமாகியுள்ளது. இதில் டிரைவிங்கில் தொடங்கி குக்குங், க்ளீனிங், அக்கவுன்டிங் என அனைத்து வேலைகளும் பெண்களின் வசமே.

''மிகவும் சந்தோஷமாக வேலை பார்க்கிறோம்..!" என்கிறார் 'செவன்த் சின்' ஃபுட் ட்ரக்கின் உரிமையாளர் அர்ச்சனா சிங். ''எங்கள் ஃபுட் ட்ரக்கின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அது சர்வதேச வகை உணவு என்றாலும்கூட, அதில் இந்தியப் பாரம்பர்ய ருசியும் கலந்திருக்கும். அதை நாங்கள் 'குலோக்கல்' என்று குறிப்பிடுகிறோம். அதாவது, குலோபல் ப்ளஸ் லோக்கல். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களுக்கு உதவும் பொருட்டு, இங்கு பணிபுரியும் அனைத்துப் பெண்களையுமே அதுபோன்ற பின்புலத்தில் இருந்தே தேர்ந்தெடுத்திருக்கிறோம்" என்கிறார் அர்ச்சனா.
பாஸ்தா, மலாய் வெஜ்ஜி ரஸ்து, செட்டிநாடு சைடு டிஷ்கள் என்று 'செவன்த் சின்'னின் அன்றாட மெனு அசத்துகிறது. வாரத்தில் ஆறு நாட்கள் ஐ.டி நிறுவனங்கள், கல்லூரிகள், பொது நிகழ்ச்சிகள் என மக்கள் கூடும் இடங்களில் பிஸியாக இருக்கும் இவர்களின் ஃபுட் ட்ரக், ஏழாவது நாள் கோயில், சர்ச், மசூதி உள்ளிட்ட இடங்களில் இலவச உணவு அளிக்கிறது.

செஃப் ஹெட்டாக சமையல் வேலைகளை மேற்பார்வையிடும் நடாஷா, 'செவன்த் சின்'னின் மற்றொரு தூண். ''ஒவ்வொரு புதன் கிழமையையும் மகளிர் தினமாகக் கொண்டாடும் நாங்கள், அன்றைய மெனுவில் உள்ள உணவுகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் கொடுக்கிறோம்" என்கிறார்.
''இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து என் எண்ணங்களைச் செயலாக்க உதவும் என் தோழி ப்ரவீணாவுக்கு நன்றி. பெண்கள் வாழ்க்கையில் பொருளாதாரத்துக்காக யாரையும் சார்ந்திருக்கக் கூடாது. உழைத்து முன்னேற வேண்டும். அதற்கு இன்னுமோர் உதாரணமாக எங்கள் 'ஃபுட் ட்ரக்' இருக்கும்!"
தம்ப்ஸ் அப் காட்டுகிறார் அர்ச்சனா.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.