Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 13, 2016

அருணாச்சல பிரதேச ஆளுநர் ராஜ்கோவா பதவி நீக்கம்


அருணாச்சலப் பிரதேச ஆளுநர் பதவியில் இருந்து ஜோதி பிரசாத் ராஜ்கோவா நீக்கப்பட்டுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது வரை, ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, உடல்நலத்தை காரணமாகக் கூறி, அவரை பதவி விலகுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனால், பதவியில் இருந்து விலக மறுத்த ஜோதி பிரசாத், குடியரசுத் தலைவர் தன்னை பதவி நீக்கம் செய்யும் வரை காத்திருக்கப் போவதாகக் கூறிவந்தார்.

இந்நிலையில், ஜோதி பிரசாத்தை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.