Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 23, 2016

ஊட்டச்சத்து பானங்கள் தேவையா? அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி!


குழந்தை உயரமாக வளர வேண்டுமா, புத்திசாலித்தனமாக இருக்க வேண்டுமா, ஹெல்த்தியா இருக்க வேண்டுமா ஊட்டச்சத்து பானம் வாங்கிக் கொடுங்க என்று வரும் விளம்பர மோகம் பெற்றோரை விட்டுவிடவில்லை. இந்த சத்து பானத்திலேயே நார்ச்சத்து, புரதம், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் அடங்கியுள்ளன என விளம்பரம் செய்யப்படுகிறது. குழந்தைகளைக் கவர, வண்ணமயமான பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஊட்டச்சத்து பானங்கள், இந்திய அளவில் மிகப் பெரிய வணிகச் சந்தையைக் கொண்டுள்ளன.

குழந்தைகளைக் கவர, ஊட்டச்சத்து பான நிறுவனங்கள் பல உத்திகளைக் கையாளுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், அதிகம் இனிப்பு சேர்க்கும் முறை. இந்த இனிப்புச் சுவைக்காகவே இந்த பானங்களைப் பருகும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஏராளம். இதனைப் பல வருடங்கள் தொடர்ந்து தங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்கள் உயரமாவார்கள், அவர்களின் எலும்புகள் வலுவாகும், அவர்களது நினைவுத் திறன் அதிகரிக்கும் எனப் பல பெற்றோர்கள் நம்புகின்றனர். ஆனால், 14 வயதிலிருந்து 20 வயதுள்ள சிறுவர்களும் இளைஞர்களும் ஊட்டச்சத்து பானங்கள் பருகுவதன் மூலம் அவர்களின் உடலில் அதிக அளவில் சர்க்கரை சேர்கிறது என, லண்டனில் நடந்த ஆராய்ச்சியில் தெரிய   வந்துள்ளது.

                                                     

லண்டன், இம்பீரியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஊட்டச்சத்து பானங்கள் பருகும் 1,288 இளைஞர்கள் மற்றும் 1,258 குழந்தைகளை வைத்து இந்த ஆராய்ச்சியை நடத்தினர். தொடர்ந்து மூன்று நாட்கள் அவர்களுடைய  தினசரி உணவு கண்காணிக்கப்பட்டது. பல தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஒரு நாளில் 100 மிலி ஊட்டச்சத்து பானம் பருகினால், குழந்தைகளுக்குத் தேவையான கலோரிகளைவிடக் கூடுதலாக 13 சதவிகிதம் கலோரிகள் உடலில் சேர்கின்றன. இது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான சர்க்கரை அளவைப்போல் இரண்டு மடங்காகும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவரும், 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 3-ல் ஒருவரும் உடல்பருமன் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. 19 வயதிலிருந்து 64 வயதுள்ளவர்கள் தங்கள் அன்றாட உணவில் 12 சதவிகிதம் அதிக சர்க்கரை சேர்த்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களது உடலில் 13 சதவிகிதம் சாச்சுரேட்டட் கொழுப்பு உடலில் சேர்கிறது. எனவே, தேவைக்கு அதிகமான உப்பு மற்றும் சர்க்கரையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று இந்த ஆராய்ச்சி மூலமாகத் தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து பானங்களையே நம்பி இருக்காமல் அவர்களின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பழங்கள், பச்சைக் காய்கறிகள், மீன், பால், முட்டை, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும்” என இங்கிலாந்தைச் சேர்ந்த உணவியல் நிபுணர் அலிசன் டெட் ஸ்டோன் கூறுகிறார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.