Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 27, 2016

'அப்போலோ டாக்டர்கள் நல்ல விஷயம் சொன்னாங்களே..!’ - நெகிழும் ஹுசைனி


தமிழ்நாடே பரிதவித்துக்கிடக்கிறது. கோவில், ஆலயம், மசூதி... என மத சார்பற்று அனைத்து தரப்பினரும் 'முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறி மீண்டும் கோட்டையில் வந்து அமர வேண்டும்' என்ற ஒற்றைவரியில் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரை நேரில் தரிசிக்க வேண்டி, அண்ணாசாலையில் ஆரம்பித்து அப்போலோ வரையிலான கிரீம்ஸ் சாலை முழுவதும் தொண்டர்களும் பொதுமக்களும் கண்ணீரோடு காத்துக் கிடக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், எனக்கு கராத்தே ஹூசைனியை ஞாபகத்துக்கு வந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டபோது, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து வருத்திக் கொள்ளும் அளவுக்கு உணர்ச்சிமயமானவர்.

அவரது இப்போதைய பிரார்த்தனை என்னவாக இருக்கும்? என்ற சிந்தனையோடே ஹூசைனிக்கு போன் செய்தேன்.

''சார் வணக்கம்...  என்ன உங்கள ரொம்ப நாளா ஆளையே காணோம்?''

'' ஆளக்காணோமா... அப்படிலாம் எதுவும் இல்லையே... நான் எப்பவும் போல இயங்கிக்கிட்டுதான் இருக்கேன். கராத்தே, வில் வித்தை, சிற்பக்கலை என என்னோட மாணவர்களுக்கு பயிற்சி அளிச்சுட்டு இருக்கேன். அடிக்கடி வெளியூர்களுக்கும் போய் பயிற்சி கொடுத்துட்டு வரேன்.''

''முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்காங்களே... நேரில் சென்று பார்த்தீர்களா?''

''அம்மா ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகியிருக்காங்கனு சொன்னதும் நானும் பதறிப்போயிட்டேன்.... அப்புறமா ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர்கள்கிட்டே விசாரிச்சப்பதான் அம்மாவுக்கு சாதாரணக் காய்ச்சல்தான்னு தெரியவந்தது. அப்புறம்தான் மனசுக்கு நிம்மதியா இருந்தது. அவங்களுக்கு எதுவும் இல்லை. உங்களுக்கும், எனக்கும் வர்றது மாதிரியான சாதாரண காய்ச்சல்தான். ஆனா, எதிர்க்கட்சிகள் இதையே பெரிய விஷயமாக்கி அரசியல் பண்ணிடறாங்க. அவங்க நல்லா இருக்காங்க.''



''ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது 'விமானத்தைக் கடத்தி ஜெ.வை விடுவிக்கத் திட்டம் தீட்டும் அளவு அதீத அன்பு கொண்ட முரட்டு பக்தர் நீங்கள்..."

(கேள்வியை முடிக்கும் முன்பே) '‘பாஸ்.... பாஸ்....  அந்த மாதிரி எதுவும் இப்ப பண்ணப்போறது இல்ல. காரணம், அப்போ அவங்களுக்கு எதிரா, தவறா ஒரு தீர்ப்பு சொன்னாங்க. அதில் இருந்து அவங்க வெளியே வர்றதுக்கு சாதாரண தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரை எல்லோரும் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டாங்க. அதுபோலவே நானும் பிரார்த்தனை பண்ணுணேன். என்னை நானே சிலுவையில் அறைஞ்சு வருத்திக்கிட்டேன். அந்தப் பிரார்த்தனைக்குப் பதிலா அம்மாவும் வெளியே வந்தாங்க. இப்போ அவங்களுக்கு சாதாரணக் காய்ச்சல். அதுவும் சரியாகிடுச்சு. நல்லா இருக்காங்க. வழக்கம்போல செயல்படுறாங்க. இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்துருவாங்க. இத எல்லாம் நான் சொல்லல. அங்க இருக்கக்கூடிய டாக்டர்களே சொன்னது இது. அதனால இன்னும் நூறு வருஷத்துக்கு அம்மாவை யாராலும் அசைக்கமுடியாது'' என்று நம்பிக்கையோடு பேசியவர், ''என்னையும் ஞாபகம் வெச்சு நீங்க பேட்டி எடுத்ததுக்கு ரொம்ப நன்றி பாஸ்!'' என்று மறக்காமல் நன்றி பாராட்டி பேட்டியை நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.