உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் மகன். அதற்கு முன் முதல்வராக கோலோச்சிய மாயாவதியை வீழ்த்தி 2012ல் உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர்களுக்கு உணவுப்பண்டங்கள் வாங்கிய வகையில் எட்டு கோடிக்கும் அதிகமாக தொகை செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.
உ.பி சட்டமன்றத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளில் அமைச்சர்களுக்கு டீ, காபி, சமோசா, குலோப் ஜாமூன் வாங்கிய வகையில் மட்டும் 8 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 474 ரூபாய் செலவு ஆகி இருப்பதாகவும், இவை எல்லாம் அமைச்சர்களை சந்திக்க வந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கிய செலவுகள் என்றும் கூறி இருக்கிறார்.

மேலும் நொறுக்குத் தீனி உணவுவகைகள் வாங்க எந்தெந்த அமைச்சர்களுக்கு எவ்வுளவு தொகை செலவு ஆகி இருக்கிறது என்கிற பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறார். அதில், சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அருண் குமார் கோரி 22,93,800 ரூபாய் செலவு செய்து முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் முகமது ஆஸம் கான் 22,86,620 ரூபாய் செலவு செய்து இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கைலாஷ் சவுர்ஷியா 22,85,900 ரூபாய் செலவு செய்து இருக்கிறார் என்று அவையில் சொல்லி இருக்கிறார் அகிலேஷ்.
என்னது சமோசா, டீ வாங்கிய செலவு இத்தனையா என்று வாய்பிளக்கும் அதே நேரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் சிவ்பால் யாதவ் ஒரு ரூபாய் கூட இந்த வகையில் செலவு செய்யவில்லையாம். இவர் அகிலேஷ் யாதவ்வின் மாமா என்பது கூடுதல் தகவல்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.