சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது. நாடாளுமன்றத்தில் பாட்டுப்பாடிய அ.தி.மு.க எம்.பி.க்களைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி கூட்டத்திலும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் பாட்டிப்பாடி தி.மு.க கவுன்சிலர்களை வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.
அ.தி.மு.கவை சேர்ந்த கவுன்சிலர்கள் சரோஜா, கோவிந்தசாமி, வேளாங்கண்ணி ஆகியோர் அம்மா புகழ் பாடும் பாடல்களைப் பாடியுள்ளனர். வழக்கமாக சரோஜா, பாட்டுப்பாடி அசத்துவார். அதுபோல இந்த முறையும் அவர் தனக்கே உரிய குரலில் 'பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே' என்ற பாடலை பாடினார். அதற்கு சக கவுன்சிலர்கள் பெஞ்சில் தாளம் போட்டனர். சிலர் உற்சாகத்தில் ஆட்டமும் போட்டனர். இதையெல்லாம் வேறுவழியின்றி தி.மு.க கவுன்சிலர்கள் சகித்துக் கொண்டு அரங்கில் அமைதியாக இருந்தனர்.
இந்த பாடலைத் தொடர்ந்து சரோஜா, 'சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா' என்ற பாடலை பாடினார். அப்போது, வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை... என்ற வரியை மேயர் சைதை துரைசாமி, தி.மு.க,வினரைப் பார்த்து பாடினார். கோவிந்தசாமி, 'சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்ற பாடலை பாடினார்.

கவுன்சிலர் வேளாங்கண்ணி, 'மாமா.... மாமா' என்ற சினிமா பாடலை அப்படியே 'அம்மா.... அம்மா' என்று ரீமேக் செய்து பாட.... உற்சாகத்தில் மேயர் சைதை துரைசாமி உள்பட அனைத்து அ.தி.மு.க. கவுன்சிலர்களும் தாளம் போட்டனர். இதன்பிறகு மு.க.ஸ்டாலினை தொடர்பான குற்றச்சாட்டை மேயர் சைதை துரைசாமி சொல்ல.... அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து தி.மு.க கவுன்சிலர் போஸிடம் பேசினோம். "மக்கள் பிரச்னை பேச வேண்டிய இடத்தில் இப்படி பாட்டுப்பாடி மன்ற கூட்டத்தையே கேலி கூத்தாக்கி விட்டார்கள். எங்கள் தளபதியை விமர்சனம் செய்ததால் வெளிநடப்பு செய்துள்ளோம். அவர்களது கட்சித் தலைமையை பாராட்ட வேண்டும் என்றால் கூட்டத்துக்கு வெளியே பாட்டுப்பாடலாம். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.