Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 28, 2016

மீண்டும் ராவணன் ஆதிக்கம்.. கோவை அ.தி.மு.க. கொந்தளிப்பு!


கோவையில் மீண்டும் ராவணன் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாகவும், பணத்தை வாங்கிக்கொண்டு தகுதியில்லாதவர்களுக்கு கவுன்சிலர் சீட் வழங்கியுள்ளதாகவும் கூறி இரண்டாவது நாளாக கோவையில் அதிமுகவினர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மாநகராட்சி மற்றும் மாவட்ட கவுன்சிலர்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை நேற்று வெளியிட்டது. இந்நிலையில் இந்த வேட்பாளர் பட்டியலை கண்டித்து பல இடங்களில் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபடத்துவங்கியுள்ளனர்.



கோவையில் சசிகலாவின் உறவினரான ராவணனின் ஆதிக்கத்தில், அமைச்சர் வேலுமணி பணம் பெற்றுக்கொண்டு புதியதாக வந்தவர்களுக்கும், அனுபவம் இல்லாதவர்களுக்கு கவுன்சிலர் சீட் வழங்கியதாக கூறி கோவை அதிமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட உடன் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கோவையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், "இராமநாதபுரம் பகுதிக்கு உட்பட்ட 68வது வார்டு, 70வது வார்டு, 71 வார்டு ,73வது வார்டு, 75 வதுவார்டு ஆகிய வார்டுகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்ற கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக அதிமுகவுக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், பணம் பெற்றுக்கொண்டு தகுதியில்லாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை அதிமுக தலைமை பரீசீலனை செய்யவில்லை என்றால், அதிமுகவின் வெற்றி கடுமையாக பாதிக்கப்படும். இதனால் கோவையில் திமுக தான் வெற்றி பெறும்.

சசிகலா உறவினரான ராவணன் தலையீட்டின் பேரில் சம்பந்தமில்லாத வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பணம் பெற்றுக்கொண்டு இவர்களுக்கு அமைச்சர் வேலுமணி சீட் கொடுத்திருக்கிறார்.திமுக முன்னாள் அமைச்சருக்கு நெருங்கிய ஒருவர் மூலம் தான் இந்த பண வசூல் வேலைகள் எல்லாம் நடக்கிறது. பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் சொல்லும் ஆட்களுக்கு தான் சீட் கொடுக்கப்படுகிறது. தகுதியே இல்லாதவர்களை பணத்தை பெற்றுக்கொண்டு தேர்வு செய்துள்ளனர்.

ராவணன் ஆதிக்கத்தில் தான் இவை எல்லாம் நடக்கிறது. கட்சியில் மாவட்ட செயலாளர் எல்லாம் சும்மா. ராவணனும், வேலுமணியும் தான் எல்லாமுமே. இவர்களால் தான் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மந்திரி, எம்.எல்.ஏ.க்கள் செய்யும் அயோக்கியத்தனம் கொஞ்ச நஞ்சமல்ல. எம்.எல்.ஏ.வுக்கு 4 கோடி, 5 கோடி வாங்கி தான் சீட் கொடுத்தார்கள். இப்போது கவுன்சிலர்களுக்கும் அப்படித்தான் செய்கிறார்கள்," என்றனர்.

இதேபோல் ரத்தினபுரி பகுதியிலும் அதிமுகவினர் வேட்பாளர் பட்டியலை மாற்றக்கோரி போராட்டம் நடத்தினர். இது தவிர மண்டல அதிமுக அலுவலகங்களிலும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.