Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 24, 2016

ஐ.நா.வில் வாங்கி கட்டிய நவாஸ் செரீப்பிற்கு உள்நாட்டில் எதிர்ப்பு, “பாகிஸ்தான் தனிமை படுத்தப்படுகிறது” என சாடல்


இஸ்லாமாபாத்,

ஐ.நா. பொதுசபையில் வாங்கி கட்டிய நவாஸ் செரீப்பிற்கு இப்போது உள்நாட்டில் எதிர்ப்பு எழுந்து உள்ளது. பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் “பாகிஸ்தான் தனிமையாக்கப்பட்டு வருகிறது,” என்று நவாஸ் செரீப்பை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கிஉள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். சுமார் 20 நிமிட உரையில் பெரும்பாலும் காஷ்மீரை பற்றியே குறிப்பிட்டார். காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியதுடன், கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்ட பயங்கரவாத தளபதி பர்கான் வானியை காஷ்மீர் விடுதலை அமைப்பின் சின்னம் எனவும் வர்ணித்தார். காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் குறித்த நவாஸ் செரீப்பின் பேச்சு உலகநாடுகளின் சிரிப்புக்குள்ளாகியது.

இதனையடுத்து பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு எனவும், போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறது எனவும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா கடுமையாக பதிலடி கொடுத்தது. காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகிறது என்று நவாஸ் செரீப் வழங்கிய தகவல் கோப்புகளை நிராகரித்த ஐ.நா.சபை பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறிவிட்டது. இப்போது உள்நாட்டிலும் நவாஸ் செரீப்பிற்கு எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் சையத் குர்ஷித் ஷா பேசுகையில், “நவாஸ் செரீப் அரசின் வெளிநாட்டு விவகார செயல்பாடுகள் உலக அரங்கில் பாகிஸ்தானை தனிமைப் படுத்தும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது, எந்தஒரு அண்டைய நாடுடனும் நவாஸ் செரீப் அரசு நல்ல நட்புறவை கையாளவில்லை,” என்றார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஐ.நா.சபையில் நவாஸ் செரீப்பின் பேச்சு வழக்கமானது, இந்தியாவை எதிர்க்கொள்ளும் அளவிற்கு எதையும் நவாஸ் பேசவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

எப்போதும் போல பேசுவதை தவிர்த்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பயங்கரவாத ஊக்குவிப்பு செயலில் ஈடுபடுவதை மிகைப்படுத்தி இருக்கவேண்டும் என்று கூறிஉள்ளார். அமெரிக்க பாராளுமன்றத்தில் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஷா கவலையை வெளிப்படுத்திஉள்ளார் என்றும் அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.