உலகில் நாட்டுக்கு நாடு கோஷங்கள், வலியுறுத்தல்கள் மாறுபடுகின்றன.
உதாரணமாக, நம் நாட்டில் குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என நாம் நினைக்கிறோம் என்றால், தென்கொரிய மக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு வலியுறுத்துகிறது. தென் கொரியாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துகொண்டு செல்வதால் அரசு இவ்வாறு கூறுகிறது.
ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியா, உலக நாடுகளில் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.
கடந்த 1960–ம் ஆண்டு முதல் தென்கொரியாவில் பிறப்பு விகிதம் என்பது படிப்படியாகக் குறைந்து வருகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் இருந்த பிறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு முதல் 5 மாதங்களில் 5.3 சதவிகிதம் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
இந்நிலை தொடர்ந்து நீடித்தால் தென்கொரியா உலக நாடுகளின் மக்கள்தொகை பட்டியலில் பின்னடைவுக்கு உள்ளாகி பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
இந்நிலையில்தான், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென்கொரிய சுகாதார அமைச்சகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதில், கூடுதலாக குழந்தைகள் பெற்றுக்கொள்ள இதுதான் சரியான நேரம். ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களுக்கு நிதியுதவி செய்வதுடன், தாயாருக்கு கூடுதலாக ஊதியத்துடன் விடுமுறையும் வழங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சரான சுங் சின்–யூப் தெரிவித்துள்ளார்.
மேலும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தற்போது அரசு 44 மில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கவலை!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.