பேராசிரியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
பேராசிரியை
கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 50). கோத்தகிரி மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாலதி (48). இவர்களுடைய மகள் ரம்யா (24). என்ஜினீயரிங் முடித்து விட்டு கிணத்துக்கடவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
அவர் ஈச்சனாரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். விடுமுறை நாட்களில் காரமடைக்கு வருவது வழக்கம். கோத்தகிரியில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் தர்மராஜ் தங்கி இருந்தார். கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் 3–ந் தேதி காரமடை வீட்டுக்கு ரம்யா வந்தார். வீட்டில் தாய் மாலதி இருந்தார்.
கொலை
மறுநாள் காலையில், தர்மராஜ் மாலதிக்கு போன் செய்தார். போனை யாரும் எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது ரம்யா ஆடை களைந்த நிலையில், கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மாலதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.
உடனே மாலதியை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் நினைவு திரும்பவில்லை.
வாலிபர் கைது
இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மகேஷ் என்ற டேனியல் (28) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், நகை பறிக்கும் நோக்கத்துடன் வீட்டுக்குள் புகுந்த மகேஷ், மாலதியை நாற்காலியால் தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார். ரம்யாவையும் நாற்காலியால் தாக்கியதில் அவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் ரம்யாவின் ஆடைகளை அகற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவர் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் நகை மற்றும் மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
தூக்கு தண்டனை
இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதி தனது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட மகேசுக்கு 449–வது பிரிவின் கீழ் (அத்துமீறி நுழைதல்) ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், 376–வது (பாலியல் பலாத்காரம்) பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், 307–வது (மாலதியை கொலை செய்ய முயற்சி) பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், 397–வது ( பொருட்களை கொள்ளை அடித்தல்) பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், 302–வது (கொலை செய்தல்) பிரிவின் கீழ் தூக்கு தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.