Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 30, 2016

பாம்பு கடித்து இறந்தவர் மீண்டும் உயிர் பிழைக்க உடலை உப்பால் மூடி காத்திருந்த குடும்பத்தினர்


பெலகாவி மாவட்டம் கானாபூர் அருகே நந்தகடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரளு கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா (வயது 24). இவர், நேற்று முன்தினம் காலையில் தனது தோட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவரை ஒரு விஷ பாம்பு கடித்ததாக தெரிகிறது. ஆனால் அது ருத்ரப்பாவுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த ருத்ரப்பா திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் உடனடியாக ருத்ரப்பாவை மீட்டு கானாபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார்கள்.

அங்கு ருத்ரப்பாவை பரிசோதித்த டாக்டர், அவரை பாம்பு கடித்திருப்பதாக கூறினார். இதை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து ருத்ரப்பாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ருத்ரப்பா பரிதாபமாக இறந்து விட்டார்.

இந்த நிலையில், பாம்புகளை பிடிக்கும் ஒருவர் ருத்ரப்பாவின் குடும்பத்தினரை சந்தித்து, ‘பாம்பு கடித்து இறந்தவரை 12 மணி நேரத்திற்குள் என்னால் உயிர் பிழைக்க வைத்து விட முடியும். ருத்ரப்பாவின் உடல் மீது உப்பை போட்டு மூடினால், அவர் 12 மணி நேரத்திற்குள் உயிர் பிழைத்து விடுவார்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனை உண்மை என்று ருத்ரப்பாவின் குடும்பத்தினர் நம்பினார்கள்.

உடனே அவரது குடும்பத்தினர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ருத்ரப்பாவின் உடலை வைத்தார்கள். மேலும் அவரது முகத்தை தவிர, ருத்ரப்பாவின் உடல் முழுவதும் உப்பை போட்டு மூடினர். 45 நிமிடங்களுக்கும் மேலாக ருத்ரப்பாவின் உடல் உப்பால் மூடப்பட்டு இருந்தது. அவரது குடும்பத்தினரும், ருத்ரப்பா மீண்டும் உயிர் பிழைத்து வருவார் என்று அருகிலேயே நின்று கொண்டு இருந்தார்கள்.

இந்த சம்பவம் பற்றி நந்தகடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் விரைந்து சென்றனர். மேலும் பாம்பு கடித்து பலியான ருத்ரப்பா மீண்டும் உயிர் பிழைத்து வரவாய்ப்பில்லை, யாரோ சொன்னதை நம்ப வேண்டாம் என்று ருத்ரப்பாவின் குடும்பத்தினருக்கு அறிவுரை கூறினார்கள். அதன்பிறகே ருத்ரப்பா இறந்து விட்டார், இனிமேல் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று குடும்பத்தினர் உணர்ந்தனர்.

பின்னர் உப்பால் மூடப்பட்டு இருந்த ருத்ரப்பாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, அதே ஆஸ்பத்திரியில் ருத்ரப்பாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து நந்தகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.