புதுடெல்லி,
இந்தியாவின் பிரபல டென்னிஸ் நட்சத்திரங்கள் பெயஸ், சானியா, போபண்ணா ஒருவருக்கொருவர் வார்த்தை மோதலில் ஈடுபட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டென்னிஸ் கலகம்
இந்திய மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், 25 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச டென்னிஸ் களத்தில் நீடித்து வருகிறார். 43 வயதான பெயஸ் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. 2012–ம் ஆண்டு ஒலிம்பிக்கின் போது அவருடன் ஜோடி சேர சக வீரர்கள் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா மறுத்தனர். பிறகு பெயசை சமாதானப்படுத்தும் விதமாக, சானியா மிர்சாவை அவருக்கு கலப்பு ஜோடியாக்கினார்கள்.
சமீபத்தில் பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக்கின் போதும் இதே போன்று சர்ச்சை ஏற்பட்டது. தொடக்கத்தில் அவருடன் கைகோர்க்க மறுத்த போபண்ணா பிறகு, இந்திய டென்னிஸ் சங்கத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, அவருடன் இணைந்து ஆட சம்மதித்தார். போதிய பயிற்சி மேற்கொள்ளாத இவர்கள் முதல் சுற்றுடன் நடையை கட்டினர். டேவிஸ் கோப்பை டென்னிசில் பெயசுடன் மீண்டும் இணைந்து விளையாடும் வாய்ப்பு உருவான நிலையில், காயத்தை காரணம் காட்டி போபண்ணா பின்வாங்கினார்.
சானியா பதிலடி
இந்த நிலையில் இவர்கள் இடையிலான மோதல் போக்கு மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் அளித்த ஒரு பேட்டியில் லியாண்டர் பெயஸ், ‘ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த டென்னிஸ் அணியை இந்தியா அனுப்பவில்லை. குறிப்பாக கலப்பு இரட்டையர் பிரிவுக்கு (போபண்ணா–சானியா மிர்சா) நாம் சரியான ஜோடியை தேர்வு செய்யவில்லை. அனுபவம் வாய்ந்த எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்’ என்றார்.
அவரது பேட்டியால் கோபத்திற்குள்ளான சானியா மிர்சா, பெயசின் பெயரை குறிப்பிடாமல் சாடினார். ‘ஒரு நச்சுமனிதருடன் இணைந்து ஆடுவது மட்டுமே வெற்றி பெறுவதற்கான ஒரே வழி என்றால், நான் விளையாடமாட்டேன்’ என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
போபண்ணாவும், பெயஸ் மீது மறைமுக தாக்குதல் தொடுத்திருக்கிறார். ‘தனது பெயர் எப்போதும் ஊடகத்தில் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக சக வீரர்களை விமர்சிக்கும் பழக்கம் மீண்டும் ஒரு முறை அரங்கேறி இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.
பெயஸ் தரும் விளக்கம்
இதற்கிடையே, இது போன்ற புகார்களுக்கு லியாண்டர் பெயஸ் மறுபடியும் வாய் திறந்துள்ளார். பெயஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘பெரும்பாலான எனது சக போட்டியாளர்கள் என் மீது அளவுக்கு அதிகமாக பொறமைப்படுகிறார்கள். இதுவும் எனது வாழ்க்கையில் ஒரு பகுதியாகி விட்டது. நான் எப்படி 18 கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்றேன். எப்படி 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றேன் என்பது அவர்களுக்கு புரியாமல் இருக்கலாம். சில வீரர்களுக்கு, 10 முறைக்கு மேல் வாய்ப்பு கொடுத்தும் இன்னும் சாதிக்க முடியவில்லை. வெற்றியை எட்ட கடினமாக உழைப்பதற்கு பதிலாக என்னை தாக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். எனது புகழை கெடுத்து, பொதுமக்கள் மத்தியில் லியாண்டர் பெயஸ் ஒரு கெட்டவன் என்ற அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பெயரே, ஒரு சில நிமிடங்களில் அழிக்க பார்க்கிறார்கள். என்னை வெறுப்பவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. எது சிறந்ததோ அதை தொடர்ந்து செய்வேன். பலமுறை நான் வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்து விட்டேன் என்பதை நிபுணர்கள் அறிவார்கள். அதை யாராலும் மாற்ற முடியாது’ என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.