Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

கன மழை எதிரொலி கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை


ஐதராபாத்,

பலத்த மழை காரணமாக கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து இந்த ஆறுகள் பாயும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

குண்டூர்–செகந்திரபாத் இடையே தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் இந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த மழையால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை வெள்ளத்துக்கு இதுவரை ஆந்திராவில் 9 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும் பலியாகி இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.