ராணுவ பலத்தை முழுமையாக பயன்படுத்தி இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியா வசமாகி இருக்கும் என்று விமானப்படை தலைமைத் தளபதி அருப் ராஹா தெரிவித்துள்ளார்.
விண்வெளி தொடர்பான கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராஹா கூறியதாவது:
ஐ.நா.சபை, அணிசேரா நாடுகள் அமைப்பு மற்றும் பஞ்ச சீல கொள்கை ஆகியவற்றுக்கு இணங்க நமது வெளியுறவுக் கொள்கை அமைந்திருந்தது. உயர்வான இந்த கொள்கை களின்படி நிர்வகித்து வந்தோம்.
வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் நடைமுறைக் கேற்பவும் பாதுகாப்பு தேவை களின் அடிப்படையிலும் நமது அணுகுமுறை அமையவில்லை. இதன்மூலம், உகந்த சூழ் நிலையை பராமரிக்க ராணுவத் தின் வலிமையை பயன்படுத்தத் தவறிவிட்டோம்.
எதிரி நாடுகள் நமது பகுதியை ஆக்கிரமிப்பதைத் தடுப் பதற்காகவும், மோதலை தடுப்பதற் காகவும் ராணுவ பலத்தை குறிப்பாக விமானப்படை பலத் தைப் பயன்படுத்தத் தயங்கி னோம்.
ஜம்மு காஷ்மீரில் 1947-ல் ஊடுருவல்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது, அந்தப் பகுதிக்கு ராணுவ வீரர்கள் விரைந்து செல்வதற்கு விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் உறுதுணையாக இருந்தன. அப்போது ராணுவ பலத்தை முழுமையாக பயன்ப டுத்தி இருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இப்போது நம் வசமாக இருந்திருக்கும்.
1965-ல் நடந்த போரின்போது, அரசியல் காரணங்களுக்காக கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிராக விமானப்படை பலத்தை நாம் பயன்படுத்தவில்லை. ஆனால், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்பட்ட அந்நாட்டு விமானப் படை நமது விமானப்படை தளங் கள் மீது தாக்குதல் நடத்தியது. நமக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்ட போதிலும் பதில் தாக்குதல் நடத்தவில்லை.
எனினும் 1971-ல் நடந்த போரில் மட்டுமே நாம் விமானப் படையை முழுமையாக பயன் படுத்தினோம். அப்போது முப் படைகளும் தீவிரமாக செயல் பட்டதன் விளைவாக வங்கதேசம் தனி நாடாக உருவெடுத்தது.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. நம்மை தற்காத் துக்கொள்ளவும் மோதலை தடுக்கவும் விமானப்படையின் பலத்தைப் பயன்படுத்த நாம் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.