காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் புகுந்து தாக்குதல்கள் நடத்தி 18 வீரர்கள் பலியானதை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பனிப்போர் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் வடக்கு பகுதி வான்வெளியில் சிவில் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வான்வெளியில் விமானப்படையின் போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. இதன் காரணமாக இந்தியா, தங்கள் நாட்டின்மீது போர் தொடுக்கக்கூடும், அதனால்தான் தங்கள் நாட்டு போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன என மக்கள் கருதினர். பீதி அடைந்தனர்.
அதற்கு வலு சேர்க்கும் விதமாக டி.வி. சேனல்களும், இந்தியா தாக்குதல்கள் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதன்பேரில்தான் எதிர்வியூகங்கள் வகுத்து போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியிட்டன.
ஆனால் இது வழக்கமான பயிற்சிதான் என மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போர் பதற்றம் காரணமாக கராச்சி பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.