Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 13, 2016

பெங்களூருவில் சமூக வலைத்தள பதிவுகள் தீவிர கண்காணிப்பு


பெங்களூருவில் சமூக வலைத்தள பதிவுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வன்முறை வெடித்தது

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளதை எதிர்த்தும், தமிழகத்தில் கன்னடமொழி பேசுபவரை தாக்கியதை கண்டித்தும் நேற்று கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பெங்களூருவில் வெவ்வேறு இடங்களில் தமிழக பதிவெண் கொண்ட லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழக உரிமையாளர்களின் கடைகள், ஓட்டல்கள் சூறையாடப்பட்டன. இதனால், பெங்களூருவில் வன்முறை வெடித்தது.

இதற்கிடையே, பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சந்தோஷ் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காவிரி தொடர்பாக கருத்து தெரிவித்தது தான் வன்முறைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தீவிர கண்காணிப்பு

இந்த நிலையில், பெங்களூரு மாநகர உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காவிரி விவகாரத்தில் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதுடன், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்படுகின்றன. இதை தடுக்க நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெங்களூரு மாநகர போலீசாருக்கான பேஸ்புக் பக்கத்தில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதன்படி, நகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சமூக வலைத்தள பதிவுகள் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.