Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 8, 2016

வீடியோ: பெற்றோர் அலட்சியம் பூட்டிய காருக்குள் குழந்தை தவிப்பு


ஐதராபாத்திலிருந்து பெங்களூருக்கு ஒரு பெண் குழந்தையுடன் தம்பதிகள் காரில் சென்றனர். சாமஷாபாத் அருகே உணவு சாப்பிட காரை நிறுத்தியுள்ளனர்.

அப்போது, உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தையை காரிலேயே வைத்து பூட்டி விட்டு இருவரும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர்.

திடீரென குழந்தை எழுந்து காரில் யாரும் இல்லாததை கண்டு கத்தி கதறி அழுதுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் காரை சுற்றி கூடியுள்ளனர்.

இதனையடுத்து, போலீசார் உதவியுடன் ஒருவர் நெம்புகோல் வைத்து காரின் கதவை திறந்து குழந்தையை மீட்க முயன்றுள்ளார். மீட்ப்புபணி நடந்துக்கொண்டிருந்த போது பெற்றோர் உணவருந்திவிட்டு திரும்பியுள்ளனர்.

பெற்றோரை கண்ட மக்கள் அவர்களை கடுமையாக வசைபாடியுள்ளனர். ஆனால், உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை எழுப்ப வேண்டாம் என கருதியே இவ்வாறு செய்ததாக பெற்றோர் விளக்கமளித்துள்ளனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.