கொடைக்கானலில் குணா குகையில் நவீன வேலி அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குணா குகை
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக கொடைக்கானல் விளங்கி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வதற்கு பல்வேறு இடங்கள் உள்ளன. அவற்றில் குணா குகை என்ற இடம் பிரபலமான ஒன்றாகும். காரணம் இந்த குகையில் குணா திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனால் இந்த இடத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த குகையில் மிகவும் ஆபத்தான வழுக்குப்பாறைகள் உள்ளன. குகைக்கு சென்ற சுற்றுலா பயணிகளில் 10–க்கும் மேற்பட்டோர் தவறி விழுந்து உள்ளனர். அவர்களில் ஒருவரை கூட உயிரோடு மீட்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து குகையின் மேல் பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன.
நவீன வேலி அமைக்க திட்டம்
பின்னர் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனையும் மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் தவறி விழுந்து பலியானார். இதையடுத்து குணா குகைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் அந்த பகுதி மூடப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது குணா குகையை பார்க்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆபத்தான பகுதியில் நவீன வேலி அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
இதுகுறித்து வன அலுவலர் முருகனிடம் கேட்ட போது, ‘சுற்றுலா பயணிகள் குணா குகையை பார்வையிடும் வகையில் நவீன வேலி அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வேலி அமைக்கும் பணி முடிவடைந்ததும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் குணா குகைக்கு செல்லும் சாலையை சீரமைத்து வருகிறோம். இந்த பணி விரைவில் முடிவடைந்துவிடும்’ என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.