Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனம்


கராச்சி

காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற வாய்ப்பே இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்து இருந்தார். தீவிரவாதத்தை ஊக்கு விக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபடுவதால் அந்நாட்டுடன்  கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அவர் கூறி இருந்தார்.

முன்னாள் வீரர்கள் கண்டனம்

அனுராக் தாக்கூரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். முகமது யூசுப் இதுபற்றி கூறியதாவது:-

அனுராக் தாக்கூர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணி எங்களுடன் நேரடியான தொடரில் விளையாடாமல் தவிர்த்து வருகிறது. இரு நாட்டு உறவு மேம்பட்டு இருந்த நேரத்தில்கூட பாகிஸ்தானுடன் விளையாட தயக்கம் காட்டினார். கிரிக்கெட் விவகாரங்களில் அரசியல் அல்லது அரசாங்கத்தின் தலையீடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாது என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர் அரசியல் அறிக்கை விடுக்கிறார். அவர் பாரதீய ஜனதா கட்சி தலைவராக பேசுகிறாரா? அல்லது கிரிக்கெட் வாரிய தலைவராக பேசுகிறாரா? என்பது தெரியவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் தொடரை இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள். ஆனால் தூரதிருஷ்டவசமாக போட்டி தொடர் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியதாவது; அனுராக் தாக்கூரின் அறிக்கையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானுடன் விளையாட விரும்பவில்லை என்பதை இந்தியா ஏற்கனவே எடுத்து விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்பு வைத்து இருப்பதுதான் கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் சுழற்பந்து வீரர் அப்துல் காதிர் கூறியதாவது; பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதுமே அரசியலை விட்டு விலகி நிற்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியலுடன் தான் இருக்கிறது. பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக இந்தியா நேரடி தொடரில் விளையாட வில்லை. இதனால் அனுராக் தாக்கூரின் அறிக்கைக்கு என்ன மதிப்பு இருக்கிறது. ஐ.சி.சி. போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடு வதை நிறுத்திக் கொள்வது பற்றி பாகிஸ்தான் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.    

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.