Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 1, 2016

ரூ.10 கோடி முதலீடு செய்யும் வெளிநாட்டவர் இந்தியாவில் குடியுரிமை தகுதி பெறுவார்கள்


இந்தியாவிற்கு குறைந்தபட்சம் ரூ.10 கோடி அன்னிய நேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி 20 வருடங்கள் வரையில் குடியுரிமை தகுதி பெறுவார்கள்.

நமது நாட்டில் தொழில் செய்வதை எளிமைப்படுத்தவும், முதலீடு, வருவாய், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் ஏற்ற விதத்தில், அன்னிய முதலீடு வரத்து குவிவதை நோக்கமாக கொண்டு, அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்தது. இந்த மாற்றங்களை கடந்த ஜூன் மாதம் 20–ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இந்த மாற்றங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் ரூ.10 கோடி அன்னிய நேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி 20 வருடங்கள் வரையில் குடியுரிமை தகுதி பெறுவார்கள் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

குறைந்தபட்சம் ரூ.10 கோடி அன்னிய நேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 20 வருடங்கள் வரையில் குடியுரிமை தகுதி பெறுவார்கள். விசா நடைமுறை எளிதாக்கப்படும். சொத்துகள் வாங்கவும், குடும்பத்தினர் வேலை பெறவும் அனுமதி தரப்படும். இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை அளித்தது. சிரமத்தில் உள்ள கட்டுமானத்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் வழங்கியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.