கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புனித பயணம்
சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கவும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்தவும் எனது தலைமையிலான அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெருசலேம் புனித பயணத்திற்காக நிதி உதவி வழங்கப்படுகிறது. இது வரை 2 ஆயிரத்து 340 கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கான நிர்வாக மானியம் ரூ.45 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி என உயர்த்தி வழங்கப்படுகிறது. ஹஜ் குழுவிற்கான நிர்வாக மானியம் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு உலமாக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000–த்தில் இருந்து ரூ.1,500–ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
புனரமைப்பு பணிகள்
சிறுபான்மையினர் நலன் பேணும் வகையில் பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். எங்களது தேர்தல் அறிக்கையில் ‘கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு, பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்கென அரசின் மானிய உதவி வழங்கப்படும்’ என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம்.
அதனை செயல்படுத்தும் விதமாக, கிறிஸ்தவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக ரூ.3 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதற்கென இந்த ஆண்டு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.3 கோடி
அதே போன்று, பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வக்பு வாரியத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.60 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எங்களது தேர்தல் அறிக்கையில், ‘மசூதிகள் பழுதுபார்க்கத் தேவையான நிதி உதவி வழங்கும் வகையில், வக்பு வாரியத்தில் தனியே நிதியம் ஏற்படுத்த நிதி உதவி வழங்கப்படும்’ என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம்.
அதனை செயல்படுத்தும் விதமாக, பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு தொகுப்பு நிதி உருவாக்கப்படும். இந்த தொகுப்பு நிதிக்கு ரூ.3 கோடி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் பொலிவடைய வழி வகை ஏற்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.