சியோல்,
பொருளாதார தடைக்கான ஒபாமாவின் முயற்சிகள் 'அர்த்தமற்றது'. 'நகைப்பிற்குரியது' என்று வடகொரியா கூறிஉள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும், சர்வதேச உடன்படிக்கைகளை கண்டுகொள்ளாமலும், பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வடகொரியா அணுகுண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
2006–ம் ஆண்டு ஜனவரி மாதம் 9–ந் தேதி முதன் முதலாக அணுகுண்டு வெடித்து சோதித்த அந்த நாடு தொடர்ந்து 2009, 2013 ஆண்டுகளில் அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. நான்காவதாக கடந்த ஜனவரி மாதம் 6–ந் தேதி அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுவெடித்து சோதித்தது. (இதுவும் அணுகுண்டு சோதனையாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது). 5–வது முறையாக மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை வடகொரியா அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சோதனை புங்கியே–ரி என்ற இடத்தில் நிலத்துக்கு அடியில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனை இதுவரை வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனைகளை விட ஆற்றல் வாய்ந்தது என சொல்லப்படுகிறது. இந்த அணுகுண்டு சோதனை வெற்றி கண்டிருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது. இந்த அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து வடகொரியாவில் 5.3 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. வடகொரியாவின் அணுகுண்டு சோதனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியாவின் அணுகுண்டு சோதனைக்கு ஐ.நா. சபையும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
‘‘இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பல்வேறு தீர்மானங்களை மீறிய செயல்’’ என ஐ.நா. சபை கூறி உள்ளது.
அணுஆயுத நாடாக அறிவிக்க வேண்டும்
இந்த நிலையில், வடகொரியாவை சட்டப்பூர்வமான அணுஆயுத நாடாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு அந்த நாடு திடீர் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வடகொரியாவின் போர்த்திறன் சார்ந்த நிலையை - சட்டப்பூர்வ அணுஆயுத நாடு என்கிற அங்கீகாரத்தை மறுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முயற்சித்து வருகிறார். சூரியனை உள்ளங்கையால் மறைக்க முயற்சிக்கும் இந்த செயல், முட்டாள்தனமான நடவடிக்கை,” என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே 5-வது முறையாக அணுகுண்டு வெடித்து சோதித்துள்ள வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
ஆனால் வடகொரியா ”ஒபாமாவை சுற்றியுள்ள குழுவினர், அர்த்தமற்ற பொருளாதார தடைகள் குறித்து பேசி வருகிறார்கள். இதை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது” என கூறியதாக கே.சி.என்.ஏ., செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த வடகொரிய போர் வெறிபிடித்து அலைகிறது, பாகிஸ்தான்,சீனா போன்ற நாடுகள் இதற்கு அணுஆயுத தொழில்நுட்பத்தை அளித்துள்ளதாக தெரிகிறது, இந்த நாட்டை தீண்ட தகாத நாடாக அறிவித்து தடைகள் விதித்து உலக நாடுகள் அணைத்தும் ஒன்று திரண்டு எதிர்க்கவேண்டும், இதை வளரவிட்டால் மூன்றாம் உலகப்போரில் கொண்டு சென்றுவிடும் இது முளையிலேய கில்லி எறிய படவேண்டும்.
ReplyDelete