Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 16, 2016

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பா.ஜனதா பெண் கவுன்சிலர் கோகிலா உயிரிழப்பு; கொல்லம் மக்கள் சோகம்


கொல்லம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பா.ஜனதா பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– கொல்லம் அருகே உள்ள பேவள்ளி பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 60). இவருடைய மகள் கோகிலா (22). பா.ஜனதா கட்சியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர். சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு சுனில்குமார் தனது மகளுடன் கடைக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் மருதடி என்ற இடத்தில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று திடீரென சுனில்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கோகிலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் சுனில்குமார் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுனில்குமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் கோகிலாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் தந்தையுடன், பா.ஜனதா கவுன்சிலர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூக சேவையில் கோகிலாவுக்கு அக்கறை இருந்ததால், மக்களுக்கான பிரச்னைகளில் ஆர்வத்துடன் அவர் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ''தேசிய நெடுஞ்சாலையில் கோகிலாவின் இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து மிகவும் வேகமாக ஒரு கார் வந்து கோகிலாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அந்த காரில் இருந்தவர்கள் இதனை பார்த்த பின்னரும், உதவிக்காக காரை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக சென்று மறைந்தனர். மோதிய கார் வேகமாக வந்ததுடன் மோதிய வேகத்திலேயே தப்பிச் சென்றதை பார்க்கும்போது, இது திட்டமிடப்பட்ட விபத்தாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது" என்றார்கள்.

இதனிடையே, கோகிலாவை கடந்த மூன்று நாட்களாகவே ஒரு காரில் மூன்று இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று, அவரது நடவடிக்கைகளை நோட்டமிட்ட தகவலும் தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த அன்றும் அந்த காரில் இருந்தவர்கள், கோகிலா கிளம்பிய பின்னரே அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். கோகிலா தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வரையிலும் காத்திருந்த அவர்கள், அதன் பிறகு பின் தொடர்ந்து சென்று திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தை அப்பகுதி மக்கள் கிளப்பி உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் சகதிக்குளக்கரா என்கிற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகில் அனாதையாக நிறுத்தப்பட்டு இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அந்த வாகனத்தின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள போலீசார், அதில் இருந்த மூன்று இளைஞர்களை தீவிரமாக தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.