Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 18, 2016

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குண்டுவெடிப்பு; 25 பேர் காயம்


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குண்டுவெடித்ததில் 25 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

மன்ஹாட்டனின் செல்ஷியில் இன்று திடீரென குண்டுவெடித்தது. குண்டு வெடிப்பில் 25 பேர் காயம் அடைந்து உள்ளனர். வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியில் குண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியை போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சூழ்ந்து உள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து  லோயர் மன்ஹாட்டன் பகுதியில் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் எப்.பி.ஐ. அதிகாரிகள் குண்டுவெடிப்பு பகுதியை ஆய்வு செய்து வருகிறார்கள் என்று உள்ளூர் கவுன்சிலர் கூறிஉள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர் பேசுகையில், “பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சிதறி ஓடினர்,” என்று கூறிஉள்ளார்.

இதற்கிடையே அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் அப்பகுதியில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து வெடிகுண்டு வெடித்தது என்று தெரிவித்தன. இதனை உறுதிசெய்யும் விதமாக, குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்து உள்ள நியூயார்க் போலீஸ் சேதம் அடைந்த குப்பைத் தொட்டியின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்து உள்ளது. இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர், ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.