Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 22, 2016

அதிர வைத்த கொல்லம் கொடூரம்... புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பலாத்காரம்!



கொல்லம்: புற்று நோயால் பாதிக்கப்பட்ட 90 வயதான மூதாட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில மனித உரிமை கமிஷன் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் கடக்கல் பகுதியில், தனது கணவரை இழந்து கடந்த 20 வருடங்களாக தனிமையில் வசித்துவருகிறார் இந்த மூதாட்டி. இவரை, பாபு என்பவர் கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
இந்த சம்பவத்தில் அந்த மூதாட்டி காயமடைந்துள்ளார்.
வீட்டின் பின்கதவு வழியாக வீட்டின் உள்ளே நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி என்னைப் பலாத்காரம் செய்தான். என்னைத் துன்புறுத்த வேண்டாம் என அவனிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால், அவன் கேட்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் அந்த மூதாட்டி

இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்து ஒருவாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது. ஆனால், இன்றுதான் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உறவினர்கள் அவருக்கு முறையான சிகிச்சை மற்றும் சட்ட உதவி கொடுக்கத் தயாராக இல்லாததால், சம்பவம் தாமதமாக வெளிவந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
தற்போது முதலகட்ட விசாரணைக்குப் பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். விரைவில், குற்றவாளி கைதுசெய்யப்படுவான் என கொல்லம் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அஜிதா பேகம் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மூதாட்டி இந்த பலாத்கார சம்பவத்தின்போது காயமடைந்ததாக தெரியவந்துள்ள நிலையில் இதுதொடர்பாக, அம்மாநில மனித உரிமை கமிஷன் வழக்குப்பதிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.