சுற்றுலா செல்வதே நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிப்பதற்காகதான். அதேநேரத்தில் சில விஷயங்களின் கவனமாக இருப்பதே அந்த மகிழ்ச்சியை நமக்கு தரும். குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது முன் தயாரிப்புகள் அவசியம். அவை என்னென்ன என்று பார்ப்போமா?
1 நீர் நிலைகளில் பரிசல் அல்லது படகுகளில் பயணம் மேற்கொள்ளும்போது பரிசல் ஓட்டுபவரே கூறினாலும் அளவுக்கு மீறி ஒரே படகில் பலர் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பரிசலில் நான்கு அல்லது ஐந்து பேர் பயணம் மேற்கொள்வதே சிறந்தது. அத்துடன் பயணம் செய்யும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயமாக சேஃப்டி ஜாக்கெட்டை அணிந்திருக்க வேண்டும்.
2 சுற்றுலா தளங்களில் மலைபகுதிகள், ஆபத்தான இடங்கள், நீர் நிலைகளில் நின்று செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
3 சுற்றுலாவின்போது குழந்தைகளுக்கு விலை உயர்ந்த நகைகள் அணிவிப்பது, அதிக அளவிலான பணம், செல்போன், லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களைக் கொடுப்பது போன்ற செயல்களைச் செய்ய வேண்டாம்.
4 குழந்தைகளுக்கு படிப்பு, விளையாட்டு பயிற்சிகளைக் கற்றுக்கொடுக்கிறோம். அதேபோல நீர்நிலைகளில் ஆபத்தான சூழலை எதிர்கொள்ள நீச்சல் பயிற்சிகளை கட்டாயம் கற்றுக்கொடுங்கள்.
5 பெற்றோர்கள் தங்கள் செல்போன் நம்பர், வீட்டு முகவரி, பள்ளி தொலைபேசி எண், காவல் துறையின் '100' என்ற தொலைபேசி நம்பர் ஆகியவற்றைக் கட்டாயமாக பிள்ளைகளுக்கு மனப்பாடமாக சொல்லிக்கொடுங்கள். சுற்றுலா சென்ற இடத்திலோ அல்லது மற்ற இடங்களிலோ பிள்ளைகள் தொலைந்துபோனால், செல்போன் வாயிலாக தொடர்புகொண்டோ அல்லது காவல் துறையின் உதவியாலோ உங்களிடமோ அல்லது பள்ளிக்கோ வந்தடைய உதவியாக இருக்கும்.
6 பள்ளியில் சுற்றுலா அழைத்துசெல்லும்போது தங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உடல்நலத்திற்கு ஒத்துவராத உணவுப் பொருட்களின் பட்டியலை குழந்தையிடமும் ஆசிரியரிடமும் கொடுங்கள். உடல் நலம் சரியில்லாத குழந்தையாக இருப்பின் அவருக்கு கொடுக்கப்படக் கூடிய மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கவும் மறக்காதீர்.
7 முன்பின் தெரியாத நபர்கள் உங்கள் பெற்றோர்களுக்கு ஆபத்து என்று கூறினால் அதனை நம்பி அவர்களுடன் செல்லக்கூடாது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுகொடுங்கள். அதேபோல தெரியாத நபர்கள் எது கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடக்கூடாது எனவும் பிள்ளைகளிடம் கூறுங்கள்.
8 கோடைக்காலத்தில் குளிர் பிரதேசங்களுக்கும், குளிர்காலத்தில் கோடை பிரதேசங்களுக்கும் சுற்றுலா செல்வதே சிறந்தது. மேலும், சுற்றுலா செல்லும்முன் குழந்தைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா எனவும் குறிப்பாக சுற்றுலா செல்லும் பகுதியின் பருவநிலை மாற்றங்களை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதையும் கவனித்து திட்டமிட்ட சுற்றுலாவை மேற்கொள்ளுதல் சிறந்தது. மேலும் குழந்தைகளின் மருந்து மற்றும் அத்தியாவசியமான பொருட்களையும் மறக்காமல் எடுத்துக்கொள்ளுதல் சிறந்தது.
வீட்டிலிருந்து கிளம்புவதிலிருந்து, சுற்றுலா முடிந்து வீடு திரும்பும்வரை குழந்தைகளை பெரியவர்கள் யாராவது ஒருவர் அருகில் இருந்து கவனித்துக் கொள்ளுங்கள். சுற்றுலாவை இனிதாக்கிக் கொள்ளுங்கள்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.