Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

ஸ்ரீநகரில் 79ஆவது நாளாக நீடிக்கும் போராட்டத்தால் முடங்கியுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை



ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியைத் தொடர்ந்து கிஷ்த்வார் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் 79ஆவது நாளாக நீடிக்கும் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்க தளபதி புர்கான்வாணி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கடந்த 2 மாதத்திற்கும் மேலாக தொடரும் போராட்டங்களால் 70 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் காஷ்மீரின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் நேற்று கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால், அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்ரீநகரில் 79ஆவது நாளாக தொடரும் போராட்டத்தால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.