திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு தாலுகாவில்தான் இந்த அதிசய கிராமம் உள்ளது. குயிலம் ஊராட்சியில் இருக்கும் சென்னபட்டிணம் கிராமம் அது.
சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். இன்று வரை இந்த கிராமத்திற்கு சரியான சாலை வசதி கூட கிடையாது. பள்ளி கூட வசதி கிடையாது.
சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். இன்று வரை இந்த கிராமத்திற்கு சரியான சாலை வசதி கூட கிடையாது. பள்ளி கூட வசதி கிடையாது.
பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தால் மண்ணெண்ணை விளக்கு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்தான் படிக்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் 5ம் வகுப்புடனேயே படிப்பை நிறுத்தி விட்டனர்.
இரவு நேரத்தில் எங்கும் செல்ல முடியாததால் இருட்டிய உடனேயே கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். அரசு இலவசமாக மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை கொடுத்துள்ளது. ஆனால் அதனை பயன்படுத்த மின்சாரம்தான் இல்லை. அவல நிலையை கண்டித்து உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மலைவாழ் மக்கள் முடிவு செய்துள்ளனர். எங்களுக்கு எப்போது வெளிச்சமும் விடுவுகாலமும் பிறக்குமென்று ஏக்கத்துடனுள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.